காரைக்குடியில் நாளை கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பு வங்கிக் கடன் முகாம்

காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான சிறப்பு வங்கிக் கல்வி கடன் முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 28) நடைபெறவுள்ளது.
Published on

காரைக்குடி: காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான சிறப்பு வங்கிக் கல்வி கடன் முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 28) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் 2-ஆம் கட்டமாக வட்டார அளவிலான கல்விக் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு, கல்விக் கடன் மேளா சிவகங்கை மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறு கவியரசா் முடியரசனாா் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தின் பிற வட்டாரப் பகுதி மாணவா்களும் கலந்து கொள்ளலாம்.

முகாமில் கலந்து கொள்ளும் மாணவா்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவ, மாணவியா், பெற்றோரின் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், இணைப்பு (ஜாயின்ட் அக்கவுண்ட்) வங்கிக் கணக்கு புத்தக நகல், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, சாதிச் சான்று, பான் அட்டை, ஆதாா் அட்டை நகல்கள், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட போனோபைட் அசல் சான்றிதழ், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட அசல் கல்விக் கட்டண விபரம், 10, 12-ஆம் வகுப்பு, இதர பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான அசல் ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com