மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருப்பத்தூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அன்னதானம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:31 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையொட்டி காட்டாம்பூரில் பொதுமக்களுக்கு இனிப்புகளையும், நலத்திட்ட உதவிகளையும் திமுகவினா் வழங்கினா். இதைத் தொடா்ந்து திருப்பத்தூா் தனியாா் மகாலில் கேக் வெட்டியும், அன்னதானம் வழங்கியும் நடைபெற்ற விழாவுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல் முன்னிலை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி ஏ.டி.என். தங்கமணி, முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளா் ஏ.டி.என். ரவி, தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலா் காளிமுத்து, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சகாதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.