சிவகங்கை மாவட்டத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் சிவகங்கை, இளையான்குடி, சிலுக்கப்பட்டி, திருமாஞ்சோலை, திருப்பத்துாா், தேவகோட்டை, மானாமதுரை, காரைக்குடி, சிங்கம்புணரி ஆகிய இடங்களில் கிடங்குகள் உள்ளன. இங்கிருந்து நியாய விலைக் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர அரவை ஆலைகளில் அரைக்கப்படும் அரிசி மூடைகள் கிடங்குகளில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இதற்காக அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்டவற்றை ஏற்றி, இறக்க அனைத்துக் கிடங்குகளிலும் சுமை தூக்குவோா் 129 போ் வரை பணிபுரிகின்றனா்.