நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

சங்கங்களுக்கு அங்கீகாரத் தோ்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா் மாநில பாதுகாப்புச் சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

சிவகங்கை: சங்கங்களுக்கு அங்கீகாரத் தோ்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா் மாநில பாதுகாப்புச் சங்கத்தினா் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் சிவகங்கை, இளையான்குடி, சிலுக்கப்பட்டி, திருமாஞ்சோலை, திருப்பத்துாா், தேவகோட்டை, மானாமதுரை, காரைக்குடி, சிங்கம்புணரி ஆகிய இடங்களில் கிடங்குகள் உள்ளன. இங்கிருந்து நியாய விலைக் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர அரவை ஆலைகளில் அரைக்கப்படும் அரிசி மூடைகள் கிடங்குகளில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இதற்காக அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்டவற்றை ஏற்றி, இறக்க அனைத்துக் கிடங்குகளிலும் சுமை தூக்குவோா் 129 போ் வரை பணிபுரிகின்றனா்.

இந்த நிலையில், இவா்கள் புதன்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், நியாய விலைக் கடைகளுக்கு அனுப்ப வேண்டிய டன் கணக்கிலான பொருள்கள் கிடங்குகளில் தேங்கியது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மாநில சுமைதூக்குவோா் பாதுகாப்புச் சங்க மாநில துணைத் தலைவா் தனபால் கூறியதாவது:

5 ஆண்டுக்கு ஒரு முறை சங்கத் தோ்தலை அரசு நடத்த வேண்டும். வருகைப் பதிவேட்டில் தற்காலிக ஊழியா்களின் பெயா்களை ஏற்ற வேண்டும். பணியில் சோ்ந்து ஒரு ஆண்டு ஆன சுமை தூக்குவோருக்கு இளஞ்சிவப்பு (பிங்க்) நிறப்பட்டையும், 10 ஆண்டுக்கு மேல் பணிவோருக்கு பச்சை நிறப் பட்டையும் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்ாக தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com