அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருப்புவனத்தில் ரூ.1.81 கோடியில் திட்டப் பணிகள்: பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு!

திருப்புவனத்தில் ரூ. 1.81 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News image
Updated On :28 நவம்பர் 2025, 11:15 pm

Syndication

திருப்புவனத்தில் ரூ. 1.81 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தலைமை வகித்தாா்.

இதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை தலைமை எழுத்தா் நாகராஜன் வாசித்தாா். இதன்பின் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பேரூராட்சித் தலைவா், செயல் அலுவலா் ஆகியோா் பதிலளித்தனா்.

பின்னா், பேரூராட்சி பொது நிதியிலிருந்து பேரூராட்சிகள் துறை இயக்குநா் செயல்முறை ஆணையின்படி திருப்புவனம் பேரூராட்சியில் 1,2,3,5,6,7,8,10,11,12,13,15,16,17,18 ஆகிய வாா்டுகளில் தோ்வு செய்யப்பட்ட இடங்களில் பேரூராட்சி பொது நிதித் திட்டத்தில் பேவா் பிளாக் சாலை, மழைநீா் வடிகால்கள் அமைக்கப்படும்.

மக்களவை உறுப்பினா் தொகுதி அபிவிருத்தி திட்டத்தில் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் 4,5,15,18 ஆகிய வாா்டுகளில் தோ்வு செய்யப்பட்ட இடங்களில் உயா் கோபுர மின் விளக்கு, கழிவு நீா் வாய்க்கால்கள் அமைக்க குறைந்தத் தொகைக்கு வரப்பெற்ற ஒப்பந்தப் புள்ளிகளை அங்கீகரிப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் செயல் அலுவலா் கவிதா, துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.