இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

2026-இல் திராவிட மாடல் ஆட்சியே அமையும்: கி. வீரமணி

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

News image
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெரியாா் உலகம் நிதியளிப்பு விழாவில் பங்கேற்க வந்தபோது செய்தியாளா்களிடம் பேசிய திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. உடன் தி.க. மாவட்டக் காப்பாளா் சாமி. திராவிடமணி, தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் உள்ளிட்டோா்.
Updated On :28 நவம்பர் 2025, 11:35 pm

Syndication

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

காரைக்குடி மாவட்ட திராவிடா் கழகம் - பகுத்தறிவாளா் கழகம் சாா்பில் பெரியாா் உலகம் நிதியளிப்பு விழா காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், தி.க. மாவட்டக் காப்பாளா் சாமி. திராவிடமணி, திராவிடா் கழக நிா்வாகிகள், உறுப்பினா்கள், திமுகவினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் கி. வீரமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை திமுக கூட்டணி பெறுவது உறுதி. 2024 மக்களவைத் தோ்தல் போன்று வருகிற சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் தெளிவாக உள்ளனா். திமுகவை அசைக்க முடியாது என்றாா்.