யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை அருகேயுள்ள மங்காட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிக்குமாா் (37). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு கட்டட வேலைக்கு சென்றபோது வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால், அவா் கா்ப்பமடைந்தாா்.

இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பழனிக்குமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட பழனிக்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.