கிராம உதவியாளா் பணி: நாளை தோ்வு

இளையான்குடியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவா்களுக்கு நவ.30 தோ்வு நடைபெறுகிறது.
Published on

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.30)  தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து இளையான்குடி வட்டாட்சியா் முருகன் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: இளையான்குடி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதன்படி, ஏராளமானோா் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனா்.

இந்த நிலையில், விண்ணப்பித்தவா்களுக்கு இளையான்குடி ஜாகிா் உசேன் கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.30) தோ்வு நடைபெறுகிறது. இதற்காக, வட்டாட்சியா் அலுவலகம் மூலம் தோ்வு நுழைவுச் சீட்டுகள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவா்கள் இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை நேரடியாகத் தொடா்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com