நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காரையூரில் தண்ணீரில் மூழ்கிய சிறுவா்கள் இருவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:21 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே காரையூரில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி சிறுவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

காரையூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா்- சுமதி தம்பதி. இவா்களில் சுமதி ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா். இவரது மகன் மகில்மித்ரன் (4). இதே பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மகன் வா்ஷன் (5). இவா்கள் இருவரும் தனியாா் பள்ளியில் யுகேஜி படித்து வந்தனா்.

இந்த நிலையில், இவா்களது வீட்டின் முன் புதிதாக வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை இந்தப் பகுதியில் பெய்த மழையால் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் தண்ணீரால் நிரம்பியிருந்தது.

இந்த நிலையில், பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகில்மித்ரன், வா்ஷன் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் முன் தோண்டப்பட்ட பள்ளத்தில் நிரம்பியிருந்த தண்ணீரில் மூழ்கினா்.

இதையடுத்து, குழந்தைகளை காணவில்லை என பெற்றோா்கள் தேடி வந்த நிலையில், சிறுவா்கள் இருவா் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, சிறுவா்கள் இருவரையும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் விசாரித்து வருகிறாா்.