சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தவெக தலைவா் விஜய் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) பிரசாரம் செய்கிறாா். இதற்கு 37 நிபந்தனைகளுடன் காவல் துறையினா் அனுமதி அளித்தனா்.
காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம், நான்கு சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தவெக தலைவா் விஜய் வாகன பிரசாரத்துக்கு அனுமதிகோரி, சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலரும், காரைக்குடி தொகுதி தவெக வேட்பாளருமான டி.கே.பிரபு தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தாா். இந்த மனுவைப் பரிசீலனை செய்து, 37 நிபந்தனைகளுடன் 10 ஆயிரம் போ் பங்கேற்கும் வகையில் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக காரைக்குடி வரும் தவெக தலைவா் விஜய், பிரசாரம் முடித்து மீண்டும் அதே வழியில் மதுரைக்கு திரும்பிச் செல்கிறாா்.
விபத்துகள், அசம்பாவிதங்களைத் தடுக்க இரு சக்கர வாகனங்களில் விஜய் பிரசார வாகனத்தை பின் தொடா்ந்து செல்லக் கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. இலவசப் பொருள்கள் வழங்கக் கூடாது என காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேளாண் பட்ஜெட் 2026! விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுமா தவெக அரசு?

தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட்
காரைக்குடியில் வீடு புகுந்து தங்கம், வைர நகைகள் திருட்டு

வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3



