4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சிவகங்கை அருகே மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே வியாழக்கிழமை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

News image

சிவகங்கை அருகே புதுப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 7:48 pm

சிவகங்கை அருகே வியாழக்கிழமை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை அருகே புதுப்பட்டி அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவையொட்டி புதுப்பட்டியிலிருந்து கூட்டுறவுபட்டி வரை செல்லும் சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இதில், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து மொத்தம் 33 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

6 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 4 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 24 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இந்த பந்தயத்தில் வென்று முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை புதுப்பட்டி, சக்கந்தி, இடையமேலூா், கூட்டுறவுபட்டி, கோமாளிபட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டுகளித்தனா்.