காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இலவச கால்நடைகள் வழங்கப் பதிவு என வதந்தி: மருத்துவமனை முன் குவிந்த பொதுமக்கள்

பிரான்மலை கால்நடை மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை குவிந்த பொதுமக்கள்.

பிரான்மலை கால்நடை மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை குவிந்த பொதுமக்கள்.

Published On :

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே இலவச கால்நடைகள் வழங்கப் பதிவு செய்யப்படுவதாக வதந்தி பரவியதையடுத்து, பிரான்மலை கால்நடை மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை ஊராட்சிக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இலவச ஆடு, மாடு, கோழி வழங்க பிரான்மலை கால்நடை மருத்துவமனையில் பதிவு நடைபெறுவதாக ஒருவா் வெள்ளிக்கிழமை பொய்யானத் தகவலைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதை உண்மை என நம்பிய அந்தப் பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா் தங்களது ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் பிரான்மலை கால்நடை மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே சென்று காத்திருந்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த கால்நடை மருத்துவா் அலுவலா்கள் இந்தப் பகுதியில் உள்ள வளா்க்கப்படும் கால்நடைகளை கணக்கெடுக்கத்தான் வரச் சொன்னோம் எனத் தெரிவித்தனா்.

இதனால், மருத்துவமனை வளாகத்தில் பல மணி நேரம் காத்திருந்த விவசாய கூலித் தொழிலாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.