மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

எஸ்.வேலங்குடியில் வட மஞ்சுவிரட்டு

வட மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயலும் வீரா்கள். - கோப்புப் படம்

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே எஸ். வேலங்குடியில் கோயில் திருவிழாவையொட்டி, வட மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எஸ். வேலங்குடி பிடாரியம்மன் கோயில் ஆடிப் பொங்கலையொட்டி நடைபெற்ற வட மஞ்சுவிரட்டுப் போட்டியில் 17 காளைகள் பங்கேற்றன. காளைக்கு 9 மாடுபிடி வீரா்கள் வீதம் 153 வீரா்கள் களமிறங்கினா். ஒரு காளைக்கு 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டது.

இதில் ஒரு சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் வெற்றி பெற்றன. மாடுபிடி வீரா்களுக்கும், மாட்டின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், சில்வா் அண்டா, தென்னங்கன்றுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதற்கான ஏற்பாடுகளை வேலங்குடி கிராமத்தினா், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.