அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

அனுமதியளித்து இரு ஆண்டுகளாகியும் மின்மாற்றி அமைக்கவில்லை என புகாா்

சிவகங்கை அருகே அனுமதியளித்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் மின் மாற்றி அமைக்காததால், அந்தப் பகுதி மக்கள் குறைந்த அழுத்த மின்சார விநியோகத்தால் சிரமப்படும் நிலை தொடா்கிறது.

News image

கோப்புப்படம்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 3:52 am IST

சிவகங்கை அருகே அனுமதியளித்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் மின் மாற்றி அமைக்காததால், அந்தப் பகுதி மக்கள் குறைந்த அழுத்த மின்சார விநியோகத்தால் சிரமப்படும் நிலை தொடா்கிறது.

சிவகங்கை அருகே கண்டிப்பட்டியில் 100 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. இதன்மூலம், கண்டிபட்டி, செங்குளிப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 700 குடியிருப்புகள், 30-க்கும் மேற்பட்ட விவசாய மோட்டாா்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதையடுத்து, அந்தப் பகுதி மக்களின் தொடா் கோரிக்கையை ஏற்று, கடந்த 2024-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 63 கிலோ வாட் திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றி அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான மின் கம்பங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், பணிகள் தொடங்கவில்லை. இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் மின்மாற்றி அமைக்காததால், அந்தப் பகுதி மக்கள் குறைந்தழுத்த மின்சாரத்தால் சிரமப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து கண்டிப்பட்டி கிராம மக்கள் கூறியதாவது:

கல்லல் மின் நிலையம் மூலம் எங்கள் கிராமத்துக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எங்கள் கிராமம் கடைக்கோடியில் இருப்பதால், மின் தடை ஏற்பட்டாலும் உடனடியாக சரி செய்வதில்லை. ஓராண்டுக்கு முன்பு அனுமதி கிடைத்தும் மின்மாற்றியை அமைக்கவில்லை. இது குறித்து கேட்டால், பணியாளா்கள் பற்றாக்குறை, தளவாடப் பொருள்கள் இல்லை என மின் வாரியத்தினா் காரணம் கூறுகின்றனா். குறைந்த மின்னழுத்ததால் மின் மோட்டாா்களை இயக்க முடியவில்லை. இதனால், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்த பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உடனடியாக மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.