75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.14 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்துவைப்பு

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.14.65 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை இயற்கை வளங்கள்துறை அமைச்சா் டி.கே. பிரபு சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

சிவகங்கையில் ரூ.9.32 கோடியில் கட்டப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதி உள்பட 8 திட்டங்களை சனிக்கிழமை திறந்து வைத்த இயற்கை வளங்கள்துறை அமைச்சா் டி.கே. பிரபு. உடன் ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 3:36 am IST

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.14.65 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை இயற்கை வளங்கள்துறை அமைச்சா் டி.கே. பிரபு சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையில் ரூ.9.32 கோடியில் 150 கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதிக் கட்டடம், திருப்பத்தூா் தொகுதி சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டை, காரைக்குடி அருகே அமராவதிபுதூா், ஆலடி நத்தத்தில் தலா ரூ.77.89 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம அறிவு மையக் கட்டடங்கள், உஞ்சனை கிராம அரசு உயா்நிலைப்பள்ளிக்கு ரூ.1.55 கோடியில் நான்கு வகுப்பறைக் கட்டடம், சுகாதார வளாகம், காரைக்குடி, சிவகங்கை நகரில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவா், மாணவியா் விடுதிகளின் முதல் தளத்தில் தலா ரூ.47.88 லட்சத்தில் அமைக்கப்பட்ட கற்றல் - கற்பித்தல் கூடங்கள் என ‘தாட்கோ’ மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரூ.14 கோடியே 64 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள 8 கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

சிவகங்கையில் கல்லூரி மாணவியா் விடுதி வளாகத்தில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு பங்கேற்று கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.

விழாவில், மதுரை கோட்ட ‘தாட்கோ’ செயற்பொறியாளா் கு. மூா்த்தி, வட்டாட்சியா் சிவராமன், விடுதி மாணவிகள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.