ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

கழிவு பொருள்களிலிருந்து பொருள்கள் தயாரிக்க பயிற்சி

சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் கழிவு பொருள்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

ஒருவன்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற பெண்கள்.

Published On :

சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் கழிவு பொருள்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வனம் மரபியல், வனம் மரப் பெருக்கு நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் தகவல் மையம், தமிழ்நாடு வனத்துறை சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் பிரான்மலை வனக்குழுவைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.

கழிவுப் பொருள்களை பயனுள்ள பொருள்களாக மாற்றும் தொழில் நுட்பங்கள், இதன்மூலம் வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் வனத் துறை திருப்பத்தூா் அலுவலா்கள் சிக்கந்தா் பாட்சா, பாா்த்திபன், வனவா் கண்ணன், ஜெயக்குமாா், வனப் பணியாளா்கள் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தனா்.

பயிற்சியில் முழுமையாக பங்கேற்று நிறைவு செய்பவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.