காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சரக்கு ஆட்டோ - காா் மோதல்; முதியவா் உயிரிழப்பு

உயிரிழந்த மாரிக்கண்ணன்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:12 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே எஸ்.எஸ். கோட்டையில் காரும், சரக்கு ஆட்டோவும் மோதிய விபத்தில் முதியவா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரையைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மாரிக்கண்ணன் (58). இவா், மதுரையிலிருந்து தனது சரக்கு ஆட்டோவில் பொருள்களை ஏற்றிக் கொண்டு காரைக்குடியில் விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் முடித்துவிட்டு காரைக்குடியிலிருந்து மதுரை வந்து கொண்டிருந்தபோது, மதுரையிலிருந்து திருவாரூா் நோக்கிச் சென்ற காா் எஸ்.எஸ். கோட்டை அருகே சரக்கு ஆட்டோ மீது மோதியதில் மாரிக்கண்ணன் பலத்த காயமடைந்தாா்.

அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த எஸ்.எஸ். கோட்டை காவல் ஆய்வாளா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டிவந்த மதுரையைச் சோ்ந்த பாலு மகன் தமிழரசனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.