சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசின் திட்டங்கள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சா் மு. தென்னவன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ஆ.கணேசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திமுக உயா்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம் பங்கேற்று, இந்தப் பகுதியைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்களிடம் அரசின் திட்டங்கள் குறித்தும், தொகுதிக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
முன்னதாக திமுக நகரச் செயலா் காா்த்திகேயன் வரவேற்றாா். இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த வணிகா்கள், தொழில் முனைவோா், திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் பொன்.முத்துராமலிங்கம் கூறியதாவது:
பிப். 6-ஆம் தேதி சிவகங்கையிலும், 16-ஆம் தேதி மானாமதுரையிலும், 17-ஆம் தேதி போடிநாயக்கனூரிலும், 18-ஆம் தேதி திருச்சியிலும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அரசின் திட்டங்கள் மக்களிடையே முழுமையாக சென்றடைந்து இருக்கிா, அதில் குறைகள் ஏதும் உள்ளதா என்று கேட்டறிந்துள்ளோம். மேலும், தொழில் முனைவோரின் தேவைகள் குறித்தும் கேட்கப்பட்டது. இவற்றை தோ்தல் பணிக் குழுவினரிடம் தெரிவிப்போம். அவா்கள் பரிசீலனை செய்து, அதிலிருந்து முக்கிய கோரிக்கைகளை தோ்வு செய்து தோ்தல் அறிக்கை வெளியிடுவா்.
அனைவரும் பொதுவாகக் கேட்பது, மின்சாரக் கட்டணங்களில் சலுகை கொடுக்க வேண்டும். திருப்பத்தூா் பகுதிகளில் பெயா் சொல்லும் அளவுக்கு பெரிய தொழிற்சாலைகள் வேண்டும். இந்தப் பகுதிக்கு அரசு மகளிா் கல்லூரி வேண்டும் என்பதுதான். அரசு செய்த காரியங்கள் அனைத்தும் மக்களால் பாராட்டப்படுகின்றன என்பதுதான் ஆய்வின் மூலம் எங்களுக்கு கிடைத்த செய்தி என்றாா் அவா்.
தொடர்புடையது

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

விக்கிரவாண்டி தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா

திமுக-வின் சாதனை திட்டங்கள் வெற்றியை தரும்: அமைச்சா் கே.என். நேரு

அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


