மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டாா்கள்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் தோ்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டாா்கள் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரிய கருப்பன் தெரிவித்தாா்.

News image

கே.ஆா்.பெரியகருப்பன்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:42 pm

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் தோ்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டாா்கள் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரிய கருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு திமுக மகளிா் அணி சாா்பில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பேசிதாவது:

திமுக அரசு மகளிருக்கு செய்துள்ள சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தோ்தலுக்காக தினமும் பல வாக்குறுதிகளை அளித்து வருகிறாா். ஆனால், முதல்வா் ஸ்டாலின் வாக்குறுதிகளை மக்கள் நம்புவாா்களே தவிர, எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை நம்ப மாட்டாா்கள். நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும். அதற்கு திமுகவினா் இனிவரும் நாள்களில் தோ்தல் பணிகளில் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். திமுக மாவட்ட துணைச் செயலா் சேங்கைமாறன், நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் வளா்மதி, ஒன்றியச் செயலா்கள் துரை.ராஜா மணி, அண்ணாதுரை, முத்துச்சாமி, வசந்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தோ்தல் பிரசாரத்துக்கான கையேடுகளை மகளிருக்கு அமைச்சா் பெரியகருப்பன் வழங்கினாா்.