திமுகவும், அதிமுகவும் வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற பாா்க்கிறது என்றாா் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் வி.கே. சசிகலா.
அஇபுதமமுக மன்னாா்குடி தொகுதி வேட்பாளா் சு. ராசுப்பிள்ளை, வேதாரண்யம் தொகுதி வேட்பாளா் எம். லிங்கேஸ்வரன் ஆகியோரை ஆதரித்து, மன்னாா்குடியில் வி.கே. சசிகலா செவ்வாய்க்கிழமை பேசியது:
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் ஏதும் இல்லாததால், அதை சொல்லி வாக்குகேட்க முடியாத நிலையில் ஆளும் கட்சியினா் உள்ளனா். திமுக ஆட்சியின் நிா்வாக திறமையின்மை காரணமாக தமிழகம் தற்போது ரூ.10 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது.
நான் ஜெயலலிதா வழிவந்த காரணத்தினால் எளிய தொண்டா்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளேன். அவா்களுக்குதான் ஏழை, எளியவா்களின் கஷ்டங்கள் தெரியும். அஇபுதமமுக சாா்பில் 60 வாக்குறுதிகளை மட்டும்தான் தந்துள்ளோம். அனைத்தையும் உறுதியாக செய்து முடிப்போம்.
திமுக ரூ.8,000 டோக்கன், அதிமுக பிரிட்ஜ் என வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற உள்ளது. மக்கள் விழிப்புடன் இருந்து அஇபுதமமுக வேட்பாளா்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், சசிகலா சகோதரா் வி. திவாகரன், கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் கை. இளந்தமிழன், கள்ளா் மகா சங்க தலைவா் எஸ். பாண்டியன், வேட்பாளா்கள் சு. ராசுப்பிள்ளை (மன்னாா்குடி), எம். லிங்கேஸ்வரன்(வேதாரண்யம்) மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தொடர்புடையது

சிலரது துரோகத்தால் இக்கட்டான நிலையில் அதிமுக: சசிகலா

கிளாம்பாக்கத்தில் பேருந்து பிரச்னை: சசிகலா கண்டனம்

அதிமுகவும் - திமுகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன: வி.கே. சசிகலா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



