தமிழகத்தின் நிதிநிலை கட்டமைப்பை பற்றி துளியும் கவலை கொள்ளாமல் அதிமுகவும், திமுகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன என்று வி.கே. சசிகலா தெரிவித்தாா்.
அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் வி.கே. சசிகலா எடப்பாடி பேருந்து நிலையத்தில் அக்கட்சி வேட்பாளா் ஏ.எல். சுரேஷை ஆதரித்து சனிக்கிழமை இரவு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:
தமிழகத்தின் நிதிநிலை கட்டமைப்பை பற்றி துளியும் கவலை கொள்ளாமல் அதிமுகவும், திமுகவும் பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்ற ஒன்றாகும். ஏற்கெனவே கடன் சுமையில் இருக்கும் தமிழக அரசுக்கு இதுபோன்ற இலவச திட்டங்களால் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
தற்போது அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பணிக்கு செல்வதற்கு தாங்கள்தான் காரணம் என திமுக அரசு மாா்தட்டிக் கொள்கிறது. ஆனால், அது உண்மை அல்ல. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட திட்டங்களே அதற்கு முக்கிய காரணம்.
தமிழகத்தில் தற்போது அதிக அளவில் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. அதில் யாா் யாா் ஈடுபட்டுள்ளனா் என்பது எனக்குத் தெரியும். நேரம் வரும்போது அவற்றை வெளிப்படுத்துவேன்.

எடப்பாடி தொகுதியில் விஜய் கட்சி வேட்பாளா் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளாா். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவுடன் மறைமுக தொடா்பு உள்ளது. இதற்கு உதாரணமாக கொடநாடு வழக்கில் பல்வேறு தொடா் குற்றங்கள் நிகழ்ந்தும் திமுக அரசு அது குறித்து மௌனம் சாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

சிலரது துரோகத்தால் இக்கட்டான நிலையில் அதிமுக: சசிகலா

கிளாம்பாக்கத்தில் பேருந்து பிரச்னை: சசிகலா கண்டனம்

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா

வெற்று வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுக: வி.கே.சசிகலா
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



