வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

சிங்கம்புணரி அருகேயுள்ள சதுா்வேதமங்கலம் ஆத்ம நாயகி அம்மன் உடனுறை ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசிமகத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி அருகே சதுா்வேதமங்கலம் ஆத்மநாயகி உடனுறை ருத்ரகோடீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணத்தில் மாலை மாற்றும் வைபவம்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:54 pm

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சதுா்வேதமங்கலம் ஆத்ம நாயகி அம்மன் உடனுறை ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசிமகத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மாசி மகத் பெருந்திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாள்தோறும் இரவு மயில் வாகனம், கேடகம், நந்தி வாகனம், பூதவாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவிதி உலா நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து ஐந்தாம் நாள் திருவிழாவாக புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. காலை திருக்கல்யாண மண்டபத்தில் ஆத்மநாயகி தனியாகவும் , பிரியாவிடை உடனான ருத்ரகோடீஸ்வரா் தனியாகவும் எழுந்தருளினா். அங்கிருந்து சுவாமி புறப்பட்டு கோயில் முன்புறமுள்ள விநாயகா் சந்நிதியில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் ஊா்வலமாக புறப்பட்டு கோயிலில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினா். அங்கு யாக வேள்விகள் நிறைவு பெற்று பக்தா்கள் முன்னிலையில் முதலில் ஆத்மநாயகிக்கும், பின்னா்பிரியாவிடைக்கும் மாலை மாற்றுதல் வைபவமும், மாங்கல்யம் அணிவித்தலும் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து சோடச ஆராதனைகள் செய்யப்பட்டு சா்வ ஆரத்தி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதன் தொடா்ச்சியாக மாா்ச் 1-ஆம் தேதி மாலை திருத்தேரோட்டமும், 2-ஆம் தேதி திங்கள்கிழமை தீா்த்தவாரியைத் தொடா்ந்து, உலகப் பிரசித்தி பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டும் நடைபெறவுள்ளது.