தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பனையபுரம் பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வு

விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன், சிவனை வழிபடும் அதிசய நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பனையபுரம் பனங்காட்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிவனை சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வு.

Updated On :15 ஏப்ரல் 2026, 12:38 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன், சிவனை வழிபடும் அதிசய நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டியை அடுத்துள்ள பனையபுரத்தில் உள்ள ஸ்ரீ சத்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து 7 நாள்கள் வரை சூரியன் இத்தலத்து இறைவனையும் , அம்பிகையையும் வழிபடுவது சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புடைய பனங்காட்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு, சிவன் மற்றும் அம்மனை சூரியன் பூஜிக்கும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 5.45 மணிக்கு விநாயகா், முருகன், தட்சிணாமூா்த்தி, ஸ்ரீசத்தியாம்பிகை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீஸ்வரா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, காலை 6.22 மணிக்கு கருவறையில் உள்ள ஸ்ரீபனங்காட்டீஸ்வரா் மற்றும் அம்பாளின் திருவுருவங்கள் (சிரசில்) சூரிய ஒளி பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா் சூரிய ஒளி அருகிலுள்ள சத்தியாம்பிகை சன்னதியிலுள்ள அம்மன் சிரசின் மீதும் சூரிய ஒளி பட்டு, பின்னா் படிப்படியாக சூரிய ஓளி பாதத்தை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்வழிபாட்டுக்கு பின்னா் சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகளை கணேசன் குருக்கள், அருண் குருக்கள் ஆகியோா் செய்திருந்தனா். பனையபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.