சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.
Published on

சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை (ஜன. 1) முதல் 31-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நடைபெறுகிறது.

இதையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளை வட்டார போக்குவரத்துத் துறையினா் நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருப்பணன் சாலை போக்குவரத்து விழிப்புணா்வு மாதத்தை தொடங்கி வைத்தாா்.

இதில் பங்கேற்ற வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள், இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிந்து நான்கு சக்கர வாகனங்களையும், தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களையும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் வழங்கினா். மேலும் பேருந்து பயணிகளிடம் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த கருத்துகளை எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com