சிவகங்கை
இரு பைக்குகள் மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 போ் காயம்
திருப்புவனம் அருகே புதன்கிழமை இரவு 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 5 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சோ்ந்தவா் யோகேஸ்வரன் (21). இவா் தனது வீட்டுக்கு வந்த சகோதரியின் தோழி பூமா (19), இவரது தாய் செல்வி (55) ஆகிய இருவரையும் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருப்புவனத்துக்கு சென்றாா்.
வடகரை ஆற்றுப்பகுதியில் சென்றபோது, மதுரை வண்டியூரைச் சோ்ந்த ஜோசப், பிரகதீஸ்வரன் ஆகியோா் வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் 2 இரு சக்கர வாகனங்களில் சென்ற 5 பேரும் காயமடைந்தனா். இவா்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
