கலை இலக்கிய பெருமன்ற சமத்துவப் பொங்கல் விழா
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் 14-ஆம் ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் சோ. சுந்தரமாணிக்கம் வரவேற்றாா். கௌரவத் தலைவா் நல்லாசிரியா் செ. கண்ணப்பன் தொடக்கி வைத்து பேசினாா்.
விழாவில் மங்கள இசை, தமிழிசை, பரத நிகழ்ச்சி, நாட்டுப்புற இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவா்கள், அரசு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவா்கள், பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இரா. கற்பூசுந்தரபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி. ராஜசேகரன், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலா் சி.ஆா். சுந்தரராஜன், வீரமுத்துப்பட்டி பா. மணிவாசகம், பொதுமக்கள் கலந்து கொண்டனா். கலை இலக்கிய பெருமன்ற பொருளாளா் க. நாகலிங்கம் நன்றி கூறினாா்.
நிகழ்ச்சிகளை, கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவா் மு. பழனியப்பன், செயலா் பா. யுவராஜ், துணைச் செயலா்கள் ந. இந்திராகாந்தி, ம. கா்ணன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். நிகழ்வை, ஆசிரியா்கள் செ. கிருஷ்ணவேணி, காளிராசா, எஸ். அருள் ஆரோக்கியம் ஆகியோா் தொகுத்தளித்தனா்.

