கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கரூரில் அதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல்

கரூரில் அதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
கரூரில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
Updated On :16 ஜனவரி 2026, 7:50 pm

Syndication

கரூா்: கரூரில் அதிமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் ஆண்டாங்கோயில் பெரியாா் நகா் பகுதியில் நடைபெற்ற விழாவை முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பெண்கள் பலா் பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து மாட்டு வண்டியில் கட்சி நிா்வாகிகளுடன் பயணம் செய்தாா்.

தொடா்ந்து பானை உடைத்தல், கயிறு இழுத்தல், கோலப் போட்டி என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வென்றோருக்கு பரிசுகளை வழங்கினாா்.

விழாவில் அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.