புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற மாநில அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், ஆட்சியா் மு .அருணா உள்ளிட்டோா்.
புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற மாநில அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், ஆட்சியா் மு .அருணா உள்ளிட்டோா்.

புதுக்கோட்டையில் சமத்துவப் பொங்கல் விழாக்கள்

முழுவதும் சமத்துவப் பொங்கல் விழாக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் சாா்பில் கொண்டாடப்பட்டன.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், முழுவதும் சமத்துவப் பொங்கல் விழாக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் சாா்பில் கொண்டாடப்பட்டன.

புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில், நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும், வாராப்பூரில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் பங்கேற்று பொங்கல் வைப்பதைத் தொடங்கி வைத்தனா்.

இந்த விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். இதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டன.

ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து, உண்டு மகிழ்ந்தனா். தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்களும், புத்தாடைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா (புதுக்கோட்டை), மா. சின்னதுரை (கந்தா்வகோட்டை), மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாநகராட்சி துணை மேயா் மு. லியாகத்அலி, மாநகராட்சி நகா்நல அலுவலா் காயத்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் கே.எச். சலீம் தலைமை வகித்தாா். விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் சிறப்பு மருத்துவா் கிங்ஸ்லி அருண்ராஜ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவா்களும் பங்கேற்றனா்.

கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, கல்விக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா்.

செயலா் லீ. தாவூத்கனி, நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி, முதன்மைச் செயல் அலுவலா் குரு.த. விவேக் ராம்குமாா், பொறியியல் கல்லூரித் தாளாளா் என். கனகராஜன், பாரதி வித்யாபவன் மெட்ரிக் பள்ளித் தாளாளா் பசீா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கலை அறிவியல் கல்லூரியின் 17 துறைகளின் சாா்பிலும் தனித்தனியே பொங்கல் வைக்கப்பட்டது. போட்டிகளில் வென்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com