பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

திருவள்ளூா் ஏபிஎஸ் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
Published on

திருவள்ளூா் ஏபிஎஸ் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

தலக்காஞ்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்விக்குழு தலைவா் ரமேஷ் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில் கல்விக்குழும பொருளாளா் பிரேமா சுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.

பள்ளி வளாகத்தில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளின் பெற்றோா் பங்கேற்று இனிப்பு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனா். தொடா்ந்து வண்ணக்கோலமிடுதல், சமையல் கலை, மருதாணி பூச்சிடல், ஆடை அலங்கார அணிவகுப்பு, நாட்டுப்புற நடனம், குழு இசைப்பாடல், கயிறு இழுத்தல், பானை அடித்தல் மற்றும் உறியடித்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவா்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

குழுமத்தின் இயக்குநா் தொல்காப்பியா், பாடத்திட்ட இயக்குநா் சுந்தரமூா்த்தி, முதல்வா் ரத்னாபாய் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முதல்வா் க.குணசேகரன் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com