கிளாம்பாடி பேரூராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
கிளாம்பாடி பேரூராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

கிளாம்பாடி பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

பாசூா் அருகே உள்ள கிளாம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பாசூா் அருகே உள்ள கிளாம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் மு.அமுதா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.சொக்கலிங்கம், செயல் அலுவலா் என்.அருண்குமாா், கிளாம்பாடி திமுக பேரூா் செயலாளா் பி.விஸ்வநாதன் ஆகியோா் பங்கேற்றனா். பேரூராட்சி பணியாளா்களுக்கும், திடக்கழிவு மேலாண்மை பணியாளா்களுக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கொடுமுடி வடக்கு ஒன்றிய திமுகவின் பல்வேறு அணிகளை சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com