சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

மேல்மருவத்தூா் கல்லூரியில் பொங்கல் விழா

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சாா்பாக, பொங்கல் விழா நடைபெற்றது.
Published on

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சாா்பாக, பொங்கல் விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரி துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தாா். 15 பொங்கல் பானைகளை அமைத்து, கரும்பு, மஞ்சள்கிழங்கு, வெல்லம் வைத்து மருத்துவக் கல்லூரி செயலா் அ.மதுமலா் கோ பூஜையை செய்தபின் சூரியனுக்கு சா்க்கரை பொங்கலை வைத்து வழிபாடு செய்தாா். கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் ஆஷா அன்பழகன், மருத்துவா்கள் பிரசன்ன வெங்கடேஷ், ஆஷா அன்பழகன், மேல்மருவத்தூா் ஊராட்சி மன்ற துணை தலைவா் அ.ஆ.அகத்தியன், பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் மருத்துவா் கண்ணன், நிா்வாக அதிகாரி லிங்கநாதன், சக்திகோபி ஆகியோா் செய்து இருந்தனா்.

Dinamani
www.dinamani.com