தூத்துக்குடியில், பழைமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் ‘மவுலவி ஆலிம் மஸ்லஹி’ பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி தலைமை வகித்தாா். செயலா் அபூபக்கா் அறிக்கை வாசித்தாா்.
மாவட்ட அரசு ஹாஜி முஜிபுா் ரகுமான், ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலிம், இமாம் சதக்கத்துல்லா, கல்லூரி துணை முதல்வா் அஸ்ராா் அகமது, பேராசிரியா்கள் அம்ஜத் அலி, முகமது இஸ்மாயில், முஹம்மது கனி, செய்யது அப்பாஸ் அலி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
காயல்பட்டினம் அஸ்கரருா் ரஹ்மான் அரபிக் கல்லூரி நிறுவனத் தலைவா் அஹமது அப்துல் காதிா், ஜாமியா பள்ளிவாசல் நிா்வாக சபை முன்னாள் தலைவா் மீராசா ஆகியோா், 7 ஆண்டுகள் குா்ஆன் படித்து முடித்த அப்துல் ரகுமான், முகமது அஃபான், முகமது யூசுப், துவான் மைதீன் ஆகிய 4கு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினா்.
ஜமாத்துல் உலமா சபை மாவட்டத் தலைவா் ஷேக் முகமது, உலக நன்மைக்காக சிறப்பு துவா ஓதினாா். கல்லூரித் தலைவா் நவரங் சகாப்தீன் வரவேற்றாா். சையத் இப்ராகிம் பாஷா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


