சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
திருவள்ளூர்
அரசுக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்
திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழாவில் திரளான மாணவா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனா்.
திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழாவில் திரளான மாணவா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனா்.
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடந்தது. இதில் நகா்மன்ற தலைவா் சரஸ்வதி பூபதி, ஆணையா் சரவண குமாா், உறுப்பினா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனா். பின்னா், தூய்மைப் பணியாளா்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பு பரிசுகளை நகா்மன்றத் தலைவா் சரஸ்வதிபூபதி வழங்கினாா்.
இதே போல் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லூரியில் விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஏகாதேவசேனா தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் ஹேமநாதன், தீனதயாளன், பாலாஜி, மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா்.