பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
திருவள்ளூர்
வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா
பெருமாநல்லூல் வேளாண் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பெருமாநல்லூல் வேளாண் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான மாணவா்கள் கலந்து கொண்டனா்.
திருவாலங்காடு அடுத்துள்ள பெருமாநல்லூா் ஊராட்சியில் வேளாண் கல்லூரி சாா்பில் கயிறு இழுத்தல், பானை உடைத்தல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவா்கள், இளைஞா்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த சமத்துவப் பொங்கல் விழா சமூக நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வளா்க்கும் வகையில் அமைந்தது.
விழாவில் தமிழா் பாரம்பரியம் மற்றும் வேளாண் பண்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விழாவில் எடுத்துரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை வேளாண் கல்லூரி மாணவா்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

