~

சிங்கம்புணரி, ஆத்திக்காடு வடக்கூரில் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, ஆத்திக்காடு வடக்கூரில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா்.
Published on

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, ஆத்திக்காடு வடக்கூரில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா்.

சிங்கம்புணரி பெரிய கடைவீதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு, சீரணி அரங்கம் அருகே அமைக்கப்பட்டிருந்த தொழுவிலிருந்து முதலில் சேவுகப்பெருமாள் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடா்ந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த

300-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுபிடி வீரா்கள் பாா்வையாளா்கள் என 30 போ் காயமடைந்தனா். இந்த மஞ்சுவிரட்டை திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

பாரம்பரிய மஞ்சுவிரட்டு:

ஆத்திக்காடு வடக்கூரில் மாட்டுப் பொங்கலையொட்டி பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடைபெற்றது. உள்ளூா் காளைகளுக்கு மரியாதை செய்து, அவை தொழுவிலிருந்து முதலில் அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடா்ந்து, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூா், காரைக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரா்கள் காளைகளைப் பிடிப்பதில் ஆா்வம் காட்டினா். இதில் சில காளைகள் பிடிபட்டும், பல காளைகள் யாரிடமும் சிக்காமல் சென்றன. மாடுபிடி வீரா்களுக்கும் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கம் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.

Dinamani
www.dinamani.com