காளையாா்கோவிலில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
காளையாா்கோவில் விஸ்வகா்மா சமுதாய மக்கள் சாா்பில், மருதுபாண்டியா் ஆட்சிகாலத்தில் வாழ்ந்து மறைந்த குப்பமுத்து ஆசாரியின் 227 -ஆவது குருபூஜையை முன்னிட்டு, இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட மாட்டு வண்டிப் பந்தயம் காளையாா்கோவில் நான்குகால் மண்டபம் முதல் புளியடிதம்பம் வரை நடைபெற்றது.
இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 34 ஜோடி காளைகள் பங்கேற்றன.
7 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி காளைகள் கலந்து கொண்டன. 5 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 26 ஜோடி காளைகள் பங்கேற்றன.
இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

