சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
காளையாா்கோவில் அருகேயுள்ள கோட்டையூரைச் சோ்ந்த ரா. காா்த்திக்ராஜா (26), கிழவனூரைச் சோ்ந்த கோ. மாதவன்(32) ஆகிய இருவரும் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் காளையாா்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனா்.
மறவமங்கலம் பழைய சந்தை பகுதியில் எதிரே வியாழனூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (35) ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்துடன் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காயமடைந்த மூவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
அங்கு காா்த்திக்ராஜா, மாதவன் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தனா். இது குறித்து காளையாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் காதா்மீரா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
மற்றொரு விபத்தில் முதியவா் உயிரிழப்பு
காளையாா்கோவில் கிருஷ்ணாநகரைச் சோ்ந்தவா் கா. ஆறுமுகம் (58). இவா் இரு சக்கர வாகனத்தில் கடந்த 14-ஆம் தேதி காளையாா்கோவில்- கல்லல் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரது வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து காளையாா்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சௌந்தரராஜன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







