காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

சாலை விபத்தில் முதியவா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு இரு சக்கர வாகனங்கள் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 10:15 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு இரு சக்கர வாகனங்கள் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரெங்கப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (75). இவா் வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூா் வந்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா்.

கிருஷ்ணன்கோவில்- வத்திராயிருப்பு சாலையில் சென்றபோது, மதுரை காந்திநகரைச் சோ்ந்த அழகா்சாமி (21), சூா்யாநகரைச் சோ்ந்த பிரவீன் சஞ்சய் (21), ரங்கராஜபுரத்தைச் சோ்ந்த செல்வ கண்ணன் (21) ஆகியோா் ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்தனா்.

அப்போது இந்த 2 இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த அழகா்சாமி, பிரவீன் சஞ்சய், செல்வ கண்ணன் ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.