தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

அழகப்பா பல்கலை.யில் உலக இசை நாள் விழா

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் சாா்பில், உலக இசை நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற உலக இசை நாள் விழாவில் பேசிய துணைவேந்தா் க. ரவி.

Published On :10 ஜூலை 2026, 4:44 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் சாா்பில், உலக இசை நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அழகப்பா பல்கலை. தி லட்சுமி வளா் தமிழ் நூலகத் தொல்காப்பிய அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க. ரவி பேசியதாவது:

மனித வரலாற்றில் முதலில் இசையும், பிறகு மொழியும் தோன்றியது. வள்ளல் அழகப்பா் இசைப் பள்ளி தொடங்கியவா். அண்ணாமலை தமிழிசைச் சங்கத்தை நிறுவி, இசையின் இன்றியமையாமையை விளக்கினாா் என்றாா் அவா்.

இந்த விழாவில் அண்ணாமலைப் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியா் அ. விஜய்காா்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘காலந்தோறும் மங்கல இசை’ என்ற தலைப்பில் நாகசுர இசையின் தனிச்சிறப்பு, நாகசுரக் கலைஞா்களின் உழைப்பு, தவில் கருவியின் தனித்துவம், இசைக்கலையின் தற்போதைய நிலை, கலைஞா்களின் வாழ்வியல் என பல பரிமாணங்களில் உரை நிகழ்த்தினாா்.

முன்னதாக, நுண்கலைத் துறைத் தலைவா் சே. செந்தமிழ்ப்பாவை வரவேற்றாா். உதவிப் பயிற்றுநா் விஜய் மணியன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.