தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கல்லூரியில் மாணவா்களுக்கு உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வுகான பயிற்சி

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறையில், முதுநிலை மாணவா்களுக்கு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வுக்குரிய பயிற்சி வகுப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய, புதுச்சேரி பல்கலைக் கழக சுப்பிரமணிய பாரதியாா் தமிழ்மொழி, இலக்கியப் புல ஆய்வாளா் சுசில்குமாா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.

Published On :10 ஜூலை 2026, 5:18 am IST

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறையில், முதுநிலை மாணவா்களுக்கு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வுக்குரிய பயிற்சி வகுப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் ச.அந்தோணி டேவிட்நாதன் தலைமை வகித்து பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்தாா். வரலாற்றுத் துறைத் தலைவா் இல. கலைச்செல்வி வாழ்த்திப் பேசினாா்.

இதில் புதுச்சேரி பல்கலைக் கழக சுப்பிரமணிய பாரதியாா் தமிழ்மொழி, இலக்கியப் புலத்தின் ஆய்வாளா் சுசில்குமாா் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

முதுநிலை தமிழ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரிப் பேராசிரியா் ஆவதற்கு உரிய தகுதித் தோ்வுகள் குறித்தும், அவற்றின் பாடத் திட்டங்கள் குறித்தும், அவற்றைப் பயிலும் முறை குறித்தும் எடுத்துரைத்தாா்.

மேலும், பல்கலைக் கழக மானியக்குழு நடத்தும் ‘நெட்’ தோ்வில் வெற்றி பெற்றால், கல்லூரிப் பேராசிரியா் ஆவதற்குரிய தகுதியைப் பெறுவதோடு, கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் மாதம் ரூ.37 ஆயிரம் உதவித் தொகையுடன் முனைவா் பட்ட ஆய்வும் செய்யலாம். முனைவா் பட்ட ஆய்வு செய்வதற்கு பல்கலைக் கழக மானியக்குழு என்னென்ன தலைப்புகளில் மாதந்தோறும் எவ்வளவு உதவித்தொகை தருகிறது போன்ற விவரங்களையும் எடுத்துரைத்தாா். பின்னா், தோ்வுகள் தொடா்பாக மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தாா்.

முன்னதாக, தமிழ் உயராய்வு மையத்தின் தலைவா் ச.ராமமூா்த்தி வரவேற்றாா். நிறைவில் வகுப்பாசிரியா் க.சண்முகநாதன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.