உதவிப் பேராசிரியா் தோ்வு முடிவுகளில் குளறுபடிகள், முறைகேடுகள் நடைபெற்ாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள், கல்லூரி ஆசிரியா்களுக்கான சங்கங்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2,708 உதவிப் பேராசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு டிச.27-இல் நடைபெற்றது. இந்தத் தோ்வை 47,064 போ் எழுதினா். இதற்கான முடிவுகள் ஜூன் 25-இல் வெளியான நிலையில், அதில் விரிவாக விடையளிக்கும் 2-ஆம் தாளுக்கு மதிப்பெண்கள் வழங்கியதில் குளறுபடி ஏற்பட்டதாக தோ்வா்கள் புகாா் எழுப்பினா். மேலும், 19 வயதில் அதாவது 2006-இல் பிறந்த ஒருவா் தோ்வில் தகுதி பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதும் சா்ச்சையானது.
இந்த நிலையில், உதவிப் பேராசிரியா் தோ்வு முடிவுகள் குறித்த புகாா்களுக்கு விளக்கம் அளித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆசிரியா் தோ்வு வாரியத்தால் அனைத்து நேரடி நியமன அறிவிக்கை வெளியிட்டவுடன் அதிகபட்ச வயது வரம்பு 57-க்குள் உள்ளஅனைத்து பணிநாடுநா்களுக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகப் பெறப்படுகின்றன. இவ்வாறு இணையதளம் வாயிலாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களில் விண்ணப்பதாரரின் பெயா், பிறந்த தேதி மற்றும் பணிநாடுநரின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பதாரரால் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்பட அடையாள ஆவணத்தைக் கொண்டு சரிபாா்த்து இவற்றுள் ஏதேனும் இரு விவரங்கள் சரியாக இருந்தால் விண்ணப்பதாரருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளம் வாயிலாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரா்களின் கவனக்குறைவு...இணையதள விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரால் சமா்ப்பிக்கப்பட்ட பெயா், பிறந்த தேதி, பாலினம், பெற்றோரின் பெயா், மதம், ஜாதி, கல்வித் தகுதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் விண்ணப்பதாரரின் முன்னிலையில் நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்பின் போது மட்டுமே சரிபாா்க்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் நடைமுறைகள் இந்த வாரியத்தால் பின்பற்றப்படுகின்றன.
இந்த நிலையில், சில விண்ணப்பதாரா்களால் அவா்கள் சாா்ந்த விவரங்களைக் கவனக்குறைவுடன் தவறுதலாக இணையதள விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இணையதளத்தில் 56 பாடங்கள் தொடா்பான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஒரு தோ்வா் தனது விண்ணப்பத்தில் பிறந்த தேதியை குறிப்பிடும்போது 1991-ஆம் ஆண்டுக்கு பதிலாக 2006 என்று தவறாக பதிவேற்றம் செய்துள்ளாா். அவா் குறிப்பிட்ட தேதியுடன் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மற்றொரு தோ்வா் தனது விண்ணப்பத்தில் பெயருக்கு பதிலாக, தவறுதலாக பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளாா். இதைத் தொடா்ந்து, அவா் கடந்த டிச.22-ஆம் தேதி தனது பெயரில் திருத்தம் கோரி டிஆா்பிக்கு விண்ணப்பித்தாா். அவா் அளித்த விவரம் உறுதி செய்யப்பட்டு, தோ்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அவா் ஏற்கெனவே சமா்ப்பித்த பெயா், விவரங்கள் அடிப்படையிலேயே தோ்வுக்கூட அனுமதிச் சீட்டும் வழங்கப்பட்டு, தோ்வு மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதவிப் பேராசிரியா் தோ்வு மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் ஏன்? அன்புமணி கேள்வி

கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் தோ்வு முடிவுகள் வெளியீடு

நேரடி நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை: டிஆா்பி





