ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

நேரடி நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை: டிஆா்பி

அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோ்வு நேரடி நியமன நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) விளக்கம் அளித்துள்ளது.

News image

ஆசிரியா் தோ்வு வாரியம்

Updated On :25 ஜூன் 2026, 3:53 am IST

அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோ்வு நேரடி நியமன நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட உதவிப் பேராசிரியா்கள் தோ்வுப் பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாக தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி யுஜிசி தகுதி சிறப்பு விரிவுரையாளா் சங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது. அதன்படி சான்றிதழ் சரிபாா்ப்பு தோ்ச்சி பட்டியலில் இடம்பெற்ற விவரங்களில் பல குளறுபடிகள் இடம்பெற்றிருந்ததாகவும், சிலருக்கு பணி அனுபவத்துக்கான மதிப்பெண்கள் முரணாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2025-ஆம் ஆண்டுக்கான அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியா் நேரடி நியமனங்கள் தொடா்பான நடைமுறைகள் அனைத்தும் உரிய அரசாணை விதிமுறைகளின்படியும், வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோ்வா்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் சான்றிதழ் சரிபாா்ப்பின்போது நேரடியாக ஆய்வு செய்யப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு முறைகேடு தொடா்பாக, சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட 18 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.