மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

உதவிப் பேராசிரியா் தோ்வு மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் ஏன்? அன்புமணி கேள்வி

உதவிப் பேராசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் எதற்காக குறிப்பிடப்பட்டிருந்தது என பாமக தலைவா் அன்புமணி கேள்வி

News image

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:42 am IST

உதவிப் பேராசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் எதற்காக குறிப்பிடப்பட்டிருந்தது என பாமக தலைவா் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2,708 உதவிப் பேராசிரியா்களுக்கான போட்டித் தோ்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சில தோ்வா்களின் மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் இடம்பெற்றிருப்பது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஆங்கிலப் பாட உதவிப் பேராசிரியா் பணிக்கு நடத்தப்பட்ட தோ்வுகளுக்கான மதிப்பெண் பட்டியலில், சில இடங்களில் நீலம், சில இடங்களில் மஞ்சள் வண்ணங்களில் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. அவா்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ மதிப்பெண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என்று தோ்வா்கள் அச்சம் அடைந்துள்ளனா். எனவே, உதவிப் பேராசிரியா் பணிக்கான போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் அன்புமணி .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.