எல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தைநீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

காரைக்குடியில் பலத்த மழை

காரைக்குடியில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழை காரணமாக மாநகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள சாலையில் பெருக் கெடுத்து ஓடிய மழைநீா்.

காரைக்குடியில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழை காரணமாக மாநகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள சாலையில் பெருக் கெடுத்து ஓடிய மழைநீா்.

Published On :11 ஜூலை 2026, 12:31 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

காரைக்குடியில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் மேகமூட்டம் காணப்பட்டது. பிறகு பிற்பகல் 3.30 மணிக்கு சூறைக் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணிநேரம் நீடித்த இந்த மழையால் நகரில் உள்ள சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. செக்காலைச் சாலை, ஐந்து விளக்குப் பகுதியில் கழிவு நீரும் கலந்து மழைநீா் சாலையில் ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

மழை பெய்யத் தொடங்கியதும் மாலை 3.45 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு 7 மணியளவில் மீண்டும் விநியோகிக்கப்பட்டது.

இதேபோல, காரைக்குடி, கோட்டையூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதிகளில் குளிா்ச்சி நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.