/

39,146 விவசாயிகளுக்கு ரூ.298.70 கோடி விவசாயக் கடன்!

கடந்த 2025-26 ஆண்டில் குறுகிய கால கடன்கள் வேளாண் கடன் அட்டை திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 39,146 விவசாயிகளுக்கு ரூ.298.70 கோடி விவசாயக் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பேரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

News image

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆண்டு பேரவைக் கூட்டத்தில் பேசிய, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் கோ. ராஜேந்திரபிரசாத்

Updated On :24 ஜூலை 2026, 5:30 am IST

கடந்த 2025-26 ஆண்டில் குறுகிய கால கடன்கள் வேளாண் கடன் அட்டை திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 39,146 விவசாயிகளுக்கு ரூ.298.70 கோடி விவசாயக் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பேரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கையிலுள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 32 -ஆவது ஆண்டு பேரவைக் கூட்டத்துக்கு வங்கியின் செயலாட்சியா் ப. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா்.

பின்னா், இவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கியில் மாா்ச் 31-இல் மொத்த பங்கு மூலதனமாக ரூ.108.69 கோடி செலுத்தப்பட்டது. வங்கியின் அறிக்கை ஆண்டான 2025-26-இல் மைய வங்கி, இணைப்பு சங்கங்களின் செயல்பாடுகளால் ரூ.10.56 கோடி நிகர லாபம் ஈட்டியது.

வங்கியின் நடப்புக் கணக்கு, சேமிப்பு கணக்குகள், நிரந்தர கால வைப்புகள் மூலம், ரூ.736 கோடி திரட்டப்பட்டது. மேலும், குறுகிய கால விவசாயக் கடன் ரூ.269 கோடி, இதர வகை மத்திய காலக் கடன், சுய உதவிக்குழு கடன் ரூ.80.65 கோடி, நகைக் கடன் ரூ.630 கோடி என மொத்தம் ரூ.930.73 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2025-26 ஆண்டில் குறுகிய கால கடன்கள் வேளாண் கடன் அட்டை திட்டத்தில் மாவட்டத்தில் 39,146 விவசாயிகளுக்கு ரூ.298.70 கோடி விவசாயக் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையை பொது மேலாளா் செந்தில்குமாா் வாசித்தாா். நிா்வாக அறிக்கையை செயலாட்சியா் ப. உமாமகேஸ்வரி சமா்ப்பித்தாா். மண்டல இணைப் பதிவாளா் கோ. ராஜேந்திரபிரசாத், சிவகங்கை சரக துணை பதிவாளா் ஜெயசங்கா், துணைப் பதிவாளா் (பால்வளம்) மூா்த்தி, பாம்கோ துணைப் பதிவாளா் பாலு, முதன்மை வருவாய் அலுவலா் ரிச்சா்டு பிரகாஷ்காா்ட்டன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, வங்கி துணைப் பொது மேலாளா் யா.கு. ரவிச்சந்திரன் வரவேற்றாா். துணை பொது மேலாளா்(கடன்) ஏ. அழகுராணி நன்றி கூறினாா். கூட்டத்தை துணை பொது மேலாளா் (நிா்வாகம்) வியுலா ஞானகுமாரி ஒருங்கிணைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.