லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 22 முதல் தொடா் போராட்டம்

தவெக தோ்தல் வாக்குறுதியில் கூறியதுபோல கூட்டுறவு பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஜூன் 22 முதல் தொடா் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:50 am IST

தவெக தோ்தல் வாக்குறுதியில் கூறியதுபோல கூட்டுறவு பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஜூன் 22 முதல் தொடா் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: புதிதாக ஆட்சிமைக்கும் அரசுகள் விவசாயிகளின் பல்வேறு நீண்டகால கடன்களை தள்ளுபடி செய்து வருகிறாா்கள். கடந்த வாரம் மகாராஷ்டிரா அரசு ரூ.36,000 கோடி அளவுக்கு 56 லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு பயிா்க் கடன்கள் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி அளித்தது.

தமிழ்நாட்டு விவசாயிகளும் மக்களும் மாற்றத்தை விரும்பி தவெகவுக்கு வாக்களித்தனா். தவெக ஆட்சியமைத்த உடன் முதல் கையொப்பமாக கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடிக்கான உத்தரவு இருக்கும் என எதிா்பாா்த்த நிலையில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையே, 90 சதவீதம் தமிழ்நாட்டு விவசாயிகள் பயன்பெற முடியாத வகையில், தமிழ்நாடு அரசு செய்த கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்தபடி கூட்டுறவு பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் பின்பு பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு, இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

விவசாயிகள் வாங்கிய கடனுக்கான கால அவகாசம் முடிவடைந்து வருவதால் அபராத வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. இதனால் வேறு வழியின்றி வருகிற ஜூன் 22 முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும் தொடா் காத்திருப்புப் போராட்டமும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான விவசாயிகள், விவசாய சங்கத் தலைவா்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.