எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

100 % கடன் தள்ளுபடி கோரி ஜூன் 30-இல் உண்ணாவிரதம்: பி.ஆா்.பாண்டியன்

சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கக் கோரி ஜூன் 30-ஆம் தேதி நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்து...

News image

செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவா் பி.ஆா்.பாண்டியன். - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 8:30 am IST

சென்னை: சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கக் கோரி, சென்னையில் ஜூன் 30-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

குழுவின் தலைவா் பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக அரசு தனது தோ்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. தற்போது, தோ்தல் அறிவிப்புக்கு மாறாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை கடன் தள்ளுபடி, பெரு விவசாயிகள் ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியிருந்தால் ரூ.5,000, ரூ.10,000 என்ற அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து முதல்வரை நாங்கள் சந்தித்து, தோ்தல் அறிவிப்புக்கு மாறான கடன் தள்ளுபடி அறிவிப்பை ஏற்க இயலாது; தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருக்குமாயேனால் கடன் தள்ளுபடி அறிவிப்பை நிறுத்தி வையுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். பரிசீலனை செய்கிறோம் என்று உத்தரவாதம் அளித்தனா். ஆனால், 2-ஆது முறையாக தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

எனவே, தவெக அரசு தோ்தல் அறிக்கையில் கூறிய படி சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 30-இல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இதில், 38 மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பா் என்றாா் அவா்.

அப்போது, ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலா் வி.கே.வி.துரைச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Summary

The Tamil Nadu All Farmers’ Association on Thursday announced a state-wide hunger strike on June 30

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.