கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000-க்கும் மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக ரூ. 35,000 பணப்பயன் கிடைக்கும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அறிவிப்பு
முதல்வர் விஜய்யால் 25.05.2026 தேதியில் ரூ.50,000 வரை பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடன் தொகை ரூ.50,001-ரூ.60,000 வரை என்றால் குறு விவசாயிகளுக்கு ரூ.40,000 தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு சிறு விவசாயிகளுக்கு ரூ.20,000 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.
கடன் தொகை ரூ.60,001-70,000 வரை குறு விவசாயிகளுக்கு ரூ.30,000, சிறு விவசாயிகளுக்கு ரூ.15,000 தள்ளுபடி. கடன் தொகை ரூ.70,001-80,000 வரை குறு விவசாயிகளுக்கு ரூ.20,000, சிறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி.
கடன் தொகை ரூ.80,001-90,000 வரை குறு விவசாயிகளுக்கு ரூ.10,000, சிறு விவசாயிகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி. கடன் தொகை ரூ.90,001-1,00,000 வரை குறு விவசாயிகளுக்கு ரூ.10,000, சிறு விவசாயிகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி.
கடன் தொகை ரூ.1 லட்சத்துக்கும் மேல் என்றால் குறு விவசாயிகளுக்கு ரூ.5,000, சிறு விவசாயிகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி.
மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ. 5,000 பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநிலம் முழுவதிலுமிருந்து இந்த விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டது.
புதிய அறிவிப்பு
இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(ஜூன் 16) அறிவித்துள்ளார்.

மேலும், கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000-க்கும் மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக ரூ. 35,000 பணப்பயன் கிடைக்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Summary
A press release issued by the Tamil Nadu government states that farmers who obtained crop loans exceeding rs. 75,000 through cooperative banks will receive a minimum cash benefit of rs. 35,000.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








