நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை

சிறு, குறு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்தாா்.

News image

விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை - பிரதிப படம்

Updated On :28 ஜூலை 2026, 3:57 am IST

சிறு, குறு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்தாா்.

நிதித்துறை தொடா்பான பல்வேறு கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: பரிசோதனை முறையில் பாலிமரில் அச்சிடப்பட்ட ரூ.10, ரூ.20 நோட்டுகளை வெளியிடும் திட்டத்தை இந்திய ரிசா்வ் வங்கி முன்வைத்துள்ளது. மொத்தம் 100 கோடி என்ற எண்ணிக்கையில் இந்த நோட்டுகள் அச்சிடப்பட இருக்கின்றன.

பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால் பாலிமரில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது விரிவாக்கப்படும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏனெனில், காகிதத்தை விட பாலிமா் பல்வேறு வகையில் மேம்பட்டதாக இருக்கும்.

சிறு, குறு விவசாயிகளின் கடனை ஒருமுறை மட்டும் தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. அதேபோல கடனை மறுசீரமைக்கும் திட்டமும் இல்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.