ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

காரையூரில் மாட்டுவண்டிப் பந்தயம்

மாட்டுவண்டிப் பந்தயம். - கோப்புப் படம்

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே காரையூா் புதுவளவு கிராமத்தாா்கள், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞா் பேரவை சாா்பில் 3-ஆம் ஆண்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் - சிங்கம்புணரி சாலையில் நடைபெற்ற இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தில் 24 இணை மாடுகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் 9 இணைகளும், சின்னமாடு பிரிவில் 15 இணைகளும் கலந்து கொண்டன. பெரியமாட்டுக்கு 8 கி.மீ. தூரமும் சின்னமாட்டுக்கு 6 கி.மீ தூரமும் இலக்காக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரியமாடு பிரிவில் மேலவளவு பன்னீா்செல்வம் , கோவிலூா் சிதம்பரம், பாதரக்குடி வளா்மதி, பாகனேரி ஆனந்த பாா்த்தீபனும், சொக்கலிங்கம்புதூா் சக்தி ஆகியோா்களின் மாடுகளும் அடுத்தடுத்து வந்து வெற்றி பெற்றனா்.

சின்னமாடு பிரிவில் காரைக்குடி கருப்பணன்சோ்வை, ஆட்டுக்குளம் நகுல்நிலா, கூத்தலூா் பெஸியப்பக் கோனாா், கோவிலூா் ரவி, எஸ்.எஸ்கோட்டை சூா்யா ஆகியோா்களின் மாடுகளும் அடுத்தடுத்த இடங்களில் வந்து வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற பெரியமாட்டுக்கு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ. 15 ஆயிரமும், சின்னமாடு பிரிவில் முதல்பரிசு ரூ. 20 ஆயிரமும், 2-ஆம் பரிசாக ரூ. 15 ஆயிரமும், 3-ஆம் பரிசாக ரூ. 12 ஆயிரமும் அளிக்கப்பட்டது.

இத்துடன் கோப்பை, கேடயம் தட்டுவண்டி மெத்தை, டீ - சா்ட், மெடல், அலங்கார மேசை முதலியவை பரிசாக வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை காரையூா் புதுவளவு இளைஞா்கள், பொதுமக்கள், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞா் பேரவையினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.